சீனாவின் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கவில்லை என இந்தியா மறுப்பு

சீனாவின் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கவில்லை என இந்தியா மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படைகள் மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இதற்கிடையே, டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது என நேற்று முன்தினம் மாலை முதல் செய்திகள் வெளியாயின. இதுதொடர்பாக டிக் டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த உத்தரவையும் இந்திய அரசு பிறப்பிக்கவில்லை என்றும், இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும், செய்தியும் தவறானது மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in