குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஒருமனதாக சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ய பாஜக முயற்சி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஒருமனதாக சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ய பாஜக முயற்சி
Updated on
1 min read

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டுள்​ளார். தொடர்ந்து அவர் இண்​டியா கூட்​ட​ணி​யிலுள்ள கட்சி தலை​வர்​களை​யும் சந்​தித்து ஆதரவு கேட்க உள்​ளார் எனத் தெரி​கிறது.

ஆளும் கட்​சி​யின் வேட்​பாளர் என்​ப​தால் அதன் தேர்​தலில் சிபிஆரின் வெற்றி உறுதி எனக் கருதப்​படு​கிறது. அதேசம​யம், சிபிஆருக்கு எதி​ராக ஒரு உறு​தி​யான வேட்​பாளரை நிறுத்த எதிர்க்​கட்​சிகள் கூட்​ட​ணி​யான இண்​டியா சார்​பிலும் வியூ​கம் அமைக்கப்​படு​கிறது.

செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெற​விருக்​கும் தேர்​தலுக்​காக நாடாளு​மன்ற சார்​பில் தரவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதன்​படி, குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் மொத்​தம் 782 எம்​பிக்​கள் வாக்​களிக்​கத் தகு​தி​யுடைய​வர்​கள். அவர்​களில் 542 பேர் மக்களவை​யிலும், 240 மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர்.

தேர்​தலில் வெற்றி பெற 392 எம்​பிக்​களின் வாக்​கு​கள் தேவைப்​படு​கின்​றன. மக்​களவை​யில் மத்​திய அரசுக்கு ஆதர​வாக 293 எம்பிக்களும், 134 எம்​பிக்​கள் மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர். இவை மொத்​தம் சேர்த்து மத்​திய அரசிற்கு 427 எம்​பிக்​களின் ஆதரவு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. எதிர்க்​கட்சி எம்​பிக்​களில் 249 பேர் மக்​களவை​யிலும், 106 பேர் மாநிலங்​களவை​யிலும் என மொத்​தம் 355 பேர் உள்​ளனர்.

எனினும், எதிர்க்​கட்சி எம்​பிக்​களில் 133 பேரின் நிலை இன்​னும் உறு​தி​யாக முடி​வெடுக்க முடி​யாத நிலை​யில் இருப்​ப​தாகக் கருதப்படு​கிறது. இந்​த 133 முடிவு செய்​யப்​ப​டாத எம்​.பி.க்​கள் வாக்​கு​களின் ஆதர​வைப் பெறு​வதற்​கான முயற்​சிகள் தீவிரமடைந்துள்​ளன.

குடியரசுத் துணைத் தலை​வ​ராக சிபிஆர் தேர்​வா​னால், நாட்​டின் ஆளுநர்​கள் பட்​டியலில் தமிழர்​கள் இல்லை என்ற நிலை வரும். அப்போது புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள். மேலும், சிபிஆர் தேர்வு, தமிழகத்தில் காங்கிரஸ்-திமுகவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் நேரடியான சவாலாகும் சூழல் தெரிகிறது.ஏனெனில் அவர் தமிழ் நாட்டின் கோயம்புத்தூரில் அதுவும் ​கொங்கு வேளாளர் சமூகத்​தைச் சேர்ந்​தவ​ராக சிபிஆர் உள்​ளார்.

இதி​லும், கோயம்​புத்​தூர் மக்​களவை தொகு​தி​யின் எம்​பி​யாக 2 முறை இருந்​துள்​ளார். இவருக்கு அளிக்​கப்​படும் புதிய பதவி​யின் தாக்​கம் தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் எதிரொலிக்​கும் என்ற எதிர்​பார்ப்​பும் பாஜக தலை​மை​யிடம் எழுந்​துள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in