‘டி ஷர்ட்'டில் எனது படம், பெயரை பயன்படுத்த பிரியங்கா, ராகுலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? - வாக்காளர் மின்டா தேவி எதிர்ப்பு

‘டி ஷர்ட்'டில் எனது படம், பெயரை பயன்படுத்த பிரியங்கா, ராகுலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? - வாக்காளர் மின்டா தேவி எதிர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மின்டா தேவி. வாக்காளர் பட்டியலில் இவர் 124 வயது மூதாட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு ஆதாரமாக மின்டா தேவியின் வாக்காளர் அட்டையையும் வெளியிட்டு பேசினார்.

இந்நிலையில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை மீண்டும் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மின்டா தேவி​யின் புகைப்​படம், பெயர் அச்​சிடப்​பட்ட ‘டி ஷர்ட்​’டை அணிந்து ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்​தி, கவுரவ் கோகய் உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

இதுகுறித்து தனி​யார் செய்தி சேனலிடம் மின்டா தேவி கூறிய​தாவது: என்​ புகைப்​படம், பெயரை டி ஷர்ட்​டில் பயன்​படுத்த அவர்​களுக்கு அதி​காரம் அளித்​தது யார்? அவர்​கள் யார்? எனக்கு ராகுல் காந்​தி​யும் பிரியங்காவும் எனக்கு என்ன உறவு?​

என்​னுடைய வாக்​காளர் அட்​டை​யில் முரண்​பாடு​கள் உள்​ளது. அதை சரி செய்ய கூறிவரு​கிறேன். என் மீது அக்​கறை உள்​ளவர்​கள் போல் காங்​கிரஸ் கட்​சி​ செயல்​படு​வது ஏன்? காங்​கிரஸ் கட்​சி​யினர் அப்​படி செய்ய கூடாது. எனக்கு அது தேவை​யில்​லை. இவ்​வாறு மின்​டா தேவி கோபத்​துடன்​ கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in