சிக்கிமில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் நிதியுதவி

சிக்கிமில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் நிதியுதவி

Published on

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து அரசாணையை வெளியிட்டது. இதற்காக ரூ.128 கோடியை சிக்கிம் மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காங்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தை முதல்வர் பிரேம் சிங் தமங் தொடங்கிவைத்துள்ளார்.

முதல் கட்டமாக வேலைக்குச் செல்லாத 32 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை அப்போது அவர் வழங்கினார். இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அந்த பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாகவும், குழந்தையைப் பெற்றிருப்பதும் அவசியமாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in