பதவி விலக திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மறு

பதவி விலக திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மறு
Updated on
1 min read

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபி ராஜு தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என ஆந்திர அரசு அறிவுறுத்தியும், அவர் ராஜினாமா செய்ய விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

திருமலை-திருப்பதி தேவஸ் தான அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு எப்போதுமே கடும் போட்டி நிலவுவது வழக்கம். ஆட்சி மாறும் போதெல்லாம், ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் தொழிலதிபர்கள் இப்பதவிக்காக பல வழிகளில் முயற்சிப்பார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்பதவி வகித்து வந்தனர். இதில் இப்போது அறங்காவலர் குழு தலைவராக உள்ள பாபி ராஜு, இரண்டாவது முறையாக தொடர்ந்து இப்பதவியில் நீடித்து வருகிறார்.

ஆந்திராவில் சமீபத்தில் நடை பெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முந்தைய அரசு நியமனம் செய்த அனைத்து கோயில்களின்அறங்காவலர் குழுக்களையும் ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கு முன்பாக இப்போது பதவி வகித்து வரும் அறங் காவலர் குழு தலைவர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பகிரங்கமாக கேட்டுக்கொள்ளப்பட்டனர். இத னால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரும் ராஜினாமா செய்வார் என எதிர் பார்க்கப்பட்டது.

இதனிடையே பல நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை திரு மலைக்கு வந்த பாபி ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, “தனக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் இந்த பதவி. தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தாலும், பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இன்னமும் என்னைவிட்டுப் போகவில்லை.

அடுத்த மாதம் 15-ம்தேதி வரை பதவி காலம் உள்ளது. அதுவரை ராஜினாமா செய்யப் போவதில்லை. ஆனால் அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in