அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும்கூட எங்கேயும் இருக்கவில்லை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவை என குறிப்பிட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854 ஆக இருந்த நிலையில், அவற்றில் தற்போது 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், இந்த எண்ணிக்கை 2,520 ஆக குறைந்துள்ளது.

பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தற்போது நாட்டில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in