எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நேற்றும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர் அவை மீண்​டும்​ கூடியபோது எதிர்க்​கட்​சிகள்​ மீண்​டும்​ இந்​த விவ​காரத்​தை கையில்​ எடுத்​து கூச்​சல்​ குழப்​பத்​தில்​ ஈடு​பட்​டதையடுத்​து இரு அவை​களும்​ நாள்​ முழு​வதும்​ ஒத்​திவைக்​கப்​பட்​டன.

மசோ​தா நிறைவேற்​றம்​: அமளிக்கு நடுவே கடல்​ வழி சரக்​கு போக்​கு​வரத்​து மசோ​தா 2025 மீது சுருக்​க​மான வி​வாதம்​ நடை​பெற்​றது. சுதந்​திரத்​திற்​கு முந்​தைய 100 ஆண்​டு​கள்​ பழமை​யான இந்​தி​ய கடல்​ வழி​யாக பொருட்​களை கொண்​டு செல்​லும்​ சட்​டம்​ 1925 ஐ மாற்​று​வதை இந்​த புதி​ய மசோ​தா நோக்​க​மாக கொண்​டுள்​ளது. இதையடுத்​து, கடல்​வழி சரக்​குப்​ போக்​கு​வரத்​து மசோ​தா 2025 இரு அவை​களி​லும்​ நேற்​று நிறைவேற்​றப்​பட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in