

ஹல்திராம்ஸ், ஐடிசி ஆகிய பிரபல நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் சில ரயில்களில் சோதனை முயற்சியாக விரைவில் விநியோகம் செய்யப்பட உள்ளன.
ரயில்களில் தரக்குறைவான உணவுப் பொருட்கள் வழங்கப் படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவுப் பொருட் களின் தரத்தை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கர்நாடகா எக்ஸ்பிரஸ், பஸ்சிம் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் ஹல்திராம்ஸ் நிறுவனம் சைவ உணவுப் பொருட்களை விரைவில் சப்ளை செய்யும். பெங்களூர்-அகமதாபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐடிசி நிறுவனம் சைவ மற்றும் அசைவ உணவுப் பொருட்களை சப்ளை செய்யும்.
பயணிகள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து மற்ற ரயில்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். கோத்ரெஜ், வடிலால் மற்றும் டைசென்புட் உள்ளிட்ட நிறுவனங்களும் ரயில்க ளில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய ஆர்வமாக உள்ளன. எனினும், இந்த நிறுவனங் களை அனுமதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
ரயில்களில் தரக்குறைவான உணவுப் பொருட்களை சப்ளை செய்ததாகக் கூறி, ஐஆர்சிடிசி உள்பட உணவுப்பொருட்கள் சப்ளை செய்த 9 நிறுவனங்களுக்கு ரயில்வேதுறை தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்தது. சமீபத்தில் மேற்கொண்ட சோதனையின்போது, கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.