ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியதும் பல நாடுகளின் பிரதிநிதிகள் எங்களை தொடர்பு​கொண்டு பேசினர். அப்​போது, நிலைமை எவ்​வளவு தீவிர​மானது, சண்டை எவ்​வளவு காலம் நீடிக்​கும் என்பன உள்​ளிட்ட தகவலை அவர்​கள் கேட்​டறிந்​தனர்.

மேலும் சமரசம் செய்ய தயா​ராக இருப்​ப​தாக​வும் தெரி​வித்​தனர். ஆனால், மூன்​றாம் தரப்​பின் எந்​த​வித சமரசத்​துக்​கும் இடம் இல்லை என அனைத்து நாடு​களிட​மும் நாங்​கள் திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​தோம்.

‘‘இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையி​லான எந்த ஒரு பிரச்​சினைக்​கும் இருதரப்பு பேச்​சு​வார்த்தை மூலம் மட்​டுமே தீர்வு காணப்​படும். பாகிஸ்​தானின் தாக்​குதலுக்கு நாங்​கள் பதிலடி கொடுத்து வரு​கிறோம். சண்டை நிறுத்​தப்பட வேண்​டு​மா​னால், ராணுவ நடவடிக்​கைகளுக்​கான இயக்​குநரகம் (டிஜிஎம்ஓ) மூலம் மட்​டுமே பாகிஸ்​தான் கோரிக்கை வைக்க வேண்​டும்’’ என உலக நாடு​களிடம் தெரி​வித்​தோம். அத்​தகைய கோரிக்கை வந்த பிறகு​தான் போர் நிறுத்​தப்​பட்​டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் உத்​தர​வால்​தான் பாகிஸ்​தான் உடனான போர் நிறுத்​தப்​பட்​ட​தாக எதிர்க்​கட்​சி​யினர் குற்​றம்​சாட்​டு​கின்​றனர். இதில் உண்மை இல்​லை. பஹல்​காம் தாக்​குதல் நடை​பெற்ற ஏப்​ரல் 22-ம் தேதி முதல் ஜூன் 16-ம் தேதி வரை​யில் பிரதமர் மோடி​யும் ட்ரம்​பும் தொலைபேசி​யில் பேசவே இல்​லை.

சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் மிக​வும் தனித்​து​வ​மானது. உலகில் எந்த ஒரு நாடும், தங்​கள் நதி நீரின் பெரும் பகு​தியை பக்​கத்து நாட்​டுக்கு வழங்​கும் வகை​யில் ஒப்​பந்​தம் செய்​து​கொண்​ட​தாக வரலாறு இல்​லை.

ஆனால், நம் நாட்டு நதி நீரின் பெரும்​பகு​தியை பாகிஸ்​தானுக்கு வழங்​கும் வகை​யில் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் போடப்​பட்​டது. இந்த வரலாற்றை காங்​கிரஸார்​ மறைக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in