பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதனை!

பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதனை!
Updated on
1 min read

புதுடெல்லி: பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ நேற்றும் இன்றும் (ஜூலை 28, 29) ஒடிசா கடல்பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சரிபார்க்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏவுகணைகள் சரியான பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாகத் தாக்கின. அனைத்து துணை அமைப்புகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டன.

பிரளய் ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் பகுதியளவு உந்து விசைத்திறன் கொண்ட ஏவுகணையாகும். இது துல்லியத்தை உறுதி செய்வதற்காக அதிநவீன வழிகாட்டுதல் அமைப்பை பயன்படுத்துகிறது. இந்த ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல வகையான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இந்த சோதனைகளை டிஆர்டிஓவின் மூத்த விஞ்ஞானிகள், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்கு டிஆர்டிஓ, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in