சிக்கிமின் சோ லா போர்க்களம் சுற்றுலா தலமாகிறது

சிக்கிமின் சோ லா போர்க்களம் சுற்றுலா தலமாகிறது
Updated on
1 min read

காங்டாக்: எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 1967-ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் மோதல் ஏற்பட்டது.

அப்போது சிக்கிம் மாநிலத்தின் இமயமலை பகுதிகளான நாது லா, சோ லா - வில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நீடித்தது. இதில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர். சீன படை வீரர்கள் பின்வாங்கினர்.

இந்த சூழலில் இந்தியாவில் உள்ள 30 போர்க்களங்கள் சுற்றுலாதலமாக மாற்றப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதன்​படி சிக்​கிம் மாநிலத்​தில் 3 இடங்​கள் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளன. இதில் நாது லா
போர்க்கள பகுதி சுற்​றுலா பயணி​களுக்கு திறந்து விடப்​பட்டு உள்​ளது. அடுத்​தகட்​ட​மாக சோ லா பகுதி சுற்​றுலா தலமாக மாற்​றப்பட உள்​ளது.

இதுகுறித்து சிக்​கிம் மாநில கூடு​தல் தலைமை செய​லா​ளர் சி.எஸ். ராவ் கூறிய​தாவது:

கடந்த 2017-ம் ஆண்​டில் சிக்​கிமின் டோக்​லாம் பகு​தி​யில் இந்​திய, சீன ராணுவங்​களுக்கு இடையே பதற்​றம் ஏற்​பட்​டது. இந்த இடத்​துக்கு அருகே உள்ள சோ லா பகு​தியை சுற்​றுலா தலமாக மாற்ற முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இது விரை​வில் சுற்​றுலா பயணி​களுக்கு திறந்​து​விடப்​படும். இவ்​வாறு சி.எஸ்​. ராவ்​ தெரி​வித்​தா​ர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in