Last Updated : 19 Jul, 2018 08:35 AM

 

Published : 19 Jul 2018 08:35 AM
Last Updated : 19 Jul 2018 08:35 AM

கேரளாவில் குற்றம் புரியாமல் கம்பி எண்ண சிறைச்சாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது

சிறைவாசம் உங்களது வாழ்நாள் கனவு என்றால், இனி அதனை வெகு சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள கேரள அரசு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப் போகிறது.

ஆம், குற்றம் ஏதும் செய்யா மலேயே பணம் செலுத்தி சிறைக்குச் செல்வதற்கான ஒரு திட்ட வரைவை தயாரித்து கேரள அரசின் அனுமதிக்காக அம்மாநில சிறைத்துறை அனுப்பியுள் ளது.

கேரளாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறை அருங்காட்சியகத்தை அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த அருங்காட்சி யகத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத் தில் இருந்த சிறைகள், கைதிகளை துன்புறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட உபகரணங் கள், சித்திரவதைக் கூடங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, பணம் செலுத்தி சிறைவாசம் அனுபவிக்கும் புதிய யோசனையை கேரள சிறைத்துறை முன்வைத்துள்ளது.

இத்திட்டத்தின்படி, குறிப்பிட்ட தொகையை ஒருவர் செலுத்தினால் அங்கு பிரத்யேகமாக அமைக் கப்பட்டிருக்கும் சிறையில் அவர் ஒரு நாள் தங்க வைக்கப்படுவார். அவருக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் அளவு சாப்பாடும், உடையும் வழங்கப்படும்.

இதுதொடர்பான திட்ட வரைவினை, கேரள அரசுக்கு சிறைத் துறை அனுப்பி வைத்துள்ளது. இத்திட்டத்துக்கு கேரள அரசின் அனுமதி கிடைக்கும்பட்சத்தில், பலரது சிறைவாசம் கனவு நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x