மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சபாநாயகர் இதை ஏற்க மறுத்ததால் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவையில் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை குறித்து பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் மற்​றும் பாஜக உறுப்​பினர்​கள் பேச அனு​மதி வழங்​கப்​படு​கிறது. ஆனால் எதிர்க்​கட்​சிகளைச் சேர்ந்த உறுப்​பினர் ஒரு​வர் இதுகுறித்து தனது கருத்தை சொல்ல முற்​பட்​டால் அதற்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது.

மக்​களவை​யில் பேச எனக்கு உரிமை உள்​ளது. ஆனால், ஒரு​போதும் நான் பேசுவதற்கு அனு​மதி வழங்​கப்​படு​வ​தில்​லை. என்​னைப் பேச அனு​ம​தித்​தால் விவாதம் நடக்​கும். ஆட்​சி​யாளர்​கள் ஏதாவது சொன்​னால் அதுகுறித்து பேச எதிர்க்​கட்​சி​யினருக்​கும் அனு​மதி தர வேண்​டும். ஆனால் அனு​மதி தரப்​படு​வ​தில்​லை. 2 வார்த்​தைகள் பேச விரும்​பு​கிறோம். ஆனால் அனு​மதி மறுக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in