ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம்: அலுவல் ஆலோசனைக் குழு அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம்: அலுவல் ஆலோசனைக் குழு அறிவிப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் மக்களவையில் 16 மணி நேரம், மாநிலங்களவையில் 9 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று அலுவல் ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது.

“எம்பிக்கள் அமைதி காக்கவேண்டும். கேள்வி நேரத்துக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கலாம்” என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடிய போது. எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது. “பிற்பகல் 2.30 மணிக்கு மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு கூடுகிறது. இந்த இடத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என்று உறுகு அளித்தார்.

ஆனால் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர்ந்து கோஷமிட்​டனர். இதைத் தொடர்ந்து பிற்​பகல் 2 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிற்​பகலில் மக்​களவை கூடிய​போது எதிர்க்​கட்​சிகள் மீண்​டும் கோஷம் எழுப்​பின. இதனால் பிற்​பகல் 4 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மாலை​யில் மக்​களவை கூடிய​போது அதே நிலை நீடித்​தது. இதைத் தொடர்ந்து நாள் முழு​வதும் அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மசோதா நிறைவேற்​றம்: மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது.ஆபரேஷன் சிந்​தூர் குறித்து மாநிலங்​களவை​யில் விரி​வான விவாதம் நடத்த வேண்​டும் என்று எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் வலி​யுறுத்​தினர். இதுகுறித்து காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே அவை​யில் பேசி​னார்.

இதுகுறித்து மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்டா கூறும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பான அனைத்து தகவல்​களும் நாட்டு மக்​களிடம் தெரிவிக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்த ராணுவ நடவடிக்கை குறித்து மாநிலங்​களவை​யில் விவாதம் நடத்த மத்​திய அரசு தயா​ராக இருக்​கிறது’’ என்று தெரி​வித்​தார்.

பிற்​பகலில் மாநிலங்​களவை கூடிய​போது, பில் ஆப் லேடிங் மசோதா பெரும்​பான்மை ஆதர​வுடன் நிறைவேற்​றப்​பட்​டது. பில் ஆப் லேடிங் என்​பது சரக்​கு​களை எடுத்துச் செல்​பவர்​கள், சரக்​கின் உரிமை​யாளர்​களுக்கு வழங்​கும் ஆவணம் தொடர்​பானது ஆகும். கடந்த 1856-ம் ஆண்டு மசோ​தாவுக்கு பதிலாக தற்​போது மாநிலங்​களவை​யில் புதிய மசோதா நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இதன்​பிறகு எம்​பிக்​களின் அமளி​யால் மாநிலங்​களவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

இதற்கிடையில், மக்​களவை அலு​வல் ஆலோ​சனைக் குழு நேற்று பிற்​பகலில் கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. அப்​போது ஆபரேஷன் சிந்​தூர் குறித்து மக்​களவை​யில் அடுத்த வாரம் 16 மணி நேரம் விவாதம் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதே​போல ஆபரேஷன் சிந்​தூர் குறித்து மாநிலங்​களவை​யில் அடுத்த வாரம் 9 மணி நேரம் விவாதம் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது.

இதுகுறித்து நா​டாளு​மன்ற வட்​டாரங்​கள் கூறும்​போது, “பிரதமர் நரேந்​திர மோடி ஜூலை 23 முதல் 26-ம் தேதி வரை வெளி​நாடு​களில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​கிறார். எனவே ஆபரேஷன் சிந்​தூர் குறித்​து நா​டாளு​மன்​றத்​தில்​ அடுத்​த வாரம்​ வி​வாதம்​ நடத்​தப்​பட உள்​ளது’’ என்​று தெரிவித்​தன.

பிரதமர் ஆலோசனை: பிரதமர் மோடி தலை​மை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் நேற்று உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங், ஜே.பி.நட்​டா, நிர்​மலா சீதா​ராமன், கிரண் ரிஜிஜு, அர்​ஜுன்​ராம் மேக்​வால் மற்​றும் பாஜக மூத்த எம்.​பி.க்​கள் பங்​கேற்​றனர். சுமார் 20 நிமிடங்​கள் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. அப்​போது நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகளை எவ்​வாறு எதிர்​கொள்​வது என்​பது குறித்து வி​வா​திக்​கப்​பட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in