இமாச்சலில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 116 பேர் உயிரிழப்பு: ரூ.1,230 கோடிக்கு சேதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சிம்லா: இமாச்சலில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 33 முறை ஃபிளாஷ் ஃபிளட்ஸ் எனப்படும் திடீர் வெள்ளமும், 22 முறை கிளவுட்பர்ஸ்ட் எனப்படும் மேகவெடிப்பு மழையும் பெய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 19 இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை, வெள்ளச் சேதத்தை இமாச்சல் பிரதேச மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் (எஸ்டிஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தால் ஜூன் 20 முதல் ஜூலை 18 வரை இமாச்சலில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் வெள்ளத்தால் பொதுச்சொத்துகள், பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன. மேலும் தானியங்கள், வைக்கோல் போன்றவை அடித்துச் செல்லப்பட்டதால் ரூ.1,230 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in