கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!

நிமிஷா பிரியா
நிமிஷா பிரியா
Updated on
1 min read

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை​யில் மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசியை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. "நிமிஷா பிரியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட அரசு முயல்கிறது.

இதற்காக இந்திய அதிகாரிகள், உள்ளூர் சிறை அதிகாரிகள், வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பில் உள்ளனர். இது மரண தண்டனை ஒத்திவைக்கப்படுவதை சாத்தியமாக்கி உள்ளது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷரியா என்​றழைக்​கப்​படும் இஸ்​லாமிய சட்​டத்​தில் குரு​திப் பணம் என்​பது ஒரு வகை​யான நீதி​யாக கருதப்​படு​கிறது. எனவே, பிரியா குடும்​பத்​தினர் சார்​பில் உயி​ரிழந்த மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்​வந்​தனர். அதை மெஹ்தி குடும்​பத்​தினர்​ ஏற்றார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in