அசாமில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற இளம் பெண்

அசாமில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற இளம் பெண்
Updated on
1 min read

குவாஹாட்டி: அசாமில் திருமணம் ஆகாத 22 வயது பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அசாமின் சிவசாகர் அரசு மருத்துவமனையில் திருமணம் ஆகாத 22 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

இந்த பச்சிளம் குழந்தையை அசாமின் சரைடியோ மாவட்டம் சபேகாதியை சேர்ந்த குழந்தையில்லாத ஒரு தம்பதிக்கு அப்பெண் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

முன்னதாக, குழந்தை நல குழுவினர் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை விற்கக் கூடாது என அப்பெண் மற்றும் அவரது தாயாரிடம் எடுத்துக் கூறினர். ஆனால் அதையும் மீறி அப்பெண் தனது குழந்தையை விற்றுள்ளார்.

இது தொடர்பாக குழந்தை நல குழுவினர் போலீஸில் புகார் அளித்தனர். அதனடிப்படியில் சிவசாகர் போலீஸார் அக்குழந் தையை மீட்டனர். இது தொடர் பாக இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த விற்பனையில் ஆஷா அமைப்பின் ஊழியர்களுக்கு தொடர்புள்ளதா என போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in