அந்தமான் அருகே பாய்மர படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை மீட்டது இந்திய கடலோர காவல் படை

அமெரிக்காவின் ‘சீ ஏஞ்சல்’ பாய்மரப் படகை மீட்டு இழுத்து செல்கிறது இந்திய கடலோர காவல் படை கப்பல் ராஜ்வீர்.
அமெரிக்காவின் ‘சீ ஏஞ்சல்’ பாய்மரப் படகை மீட்டு இழுத்து செல்கிறது இந்திய கடலோர காவல் படை கப்பல் ராஜ்வீர்.
Updated on
1 min read

புதுடெல்லி: அந்​த​மான் அருகே கடல் கொந்​தளிப்பு காரண​மாக பாய்​மரப் படகில் தத்​தளித்த 2 அமெரிக்​கர்​களை, இந்​திய கடலோர காவல் படை​யினர் நேற்று மீட்​டனர். அமெரிக்​காவைச் சேர்ந்த இரு​வர் ‘சீ ஏஞ்​சல்’ என்ற நவீன பாய்​மரப் படகில் பல நாடு​களுக்கு செல்​லும் சாகச பயணத்​தில் ஈடு​பட்​டனர்.

அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​கள் அருகே நேற்று கடல் கொந்​தளிப்​புடன் காணப்​பட்​டது. பலத்த காற்று வீசி​ய​தில் படகின் கம்​பத்​தில் கட்​டப்​பட்​டிருந்த பிளாஸ்​டிக் பாய்​கள் எல்​லாம் கிழிந்​தன.

இதனால் அந்த படகு பயணத்தை தொடர முடி​யாமல் நடுக்​கடலில் தத்​தளித்த​து. இத்​தகவல் சென்​னை​யில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதி​காரி​களிடம் தெரிவிக்​கப்​பட்​டது. அவர்​கள் இந்​திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்​டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்​திய கடலோர காவல் படை​யின் ராஜ்வீர் கப்​பல் மீட்பு பணிக்கு சென்​றது. அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​களுக்கு தெற்கே 53 மைல் தொலை​வில் படகில் தத்​தளித்​துக் கொண்​டிருந்த 2 அமெரிக்​கர்​களை​யும் இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in