உத்தராகண்ட் வழி​யாக மானசரோவர் யாத்திரை - முதல் குழு திபெத் சென்றடைந்தது

உத்தராகண்ட் வழி​யாக மானசரோவர் யாத்திரை - முதல் குழு திபெத் சென்றடைந்தது
Updated on
1 min read

பித்தோர்கர்: உத்​த​ராகண்​டில் உள்ள லிபுலேக் கணவாய் வழி​யாக மேற்​கொள்​ளப்​படும் கைலாஷ் மானசரோவர் யாத்​திரைக்கு குமாவோன் மண்​டல் விகாஸ் நிகாம் பொறுப்பு வகிக்​கிறது.

இதன் தார்ச்​சுலா அடி​வார முகாம் பொறுப்​பாளர் தன் சிங் பிஷ்த் நேற்று கூறிய​தாவது: தார்ச்​சுலா முகாமில் இருந்து 45 பக்​தர்​களை கொண்ட முதல் குழு​வினர் குஞ்​சியி​லிருந்து 4,104 அடி உயரத்​தில் உள்ள நபி​தாங்கை செவ்​வாய்க்​கிழமை அடைந்​தனர். அவர்​கள் காலநிலைக்கு தங்​களைப் பழக்​கப்​படுத்​திக் கொள்ள மறு​நாள் முழு​வதும் அங்கு தங்​கினர்.

அவர்​கள் லிபுலேக் கணவாய் வழி​யாக வியாழக்​கிழமை காலை திபெத்​திற்​குள் நுழைந்​தனர். திபெத்​தில் தக்​ல​கோட், டார்ச்​சென் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் பக்​தர்​கள் தங்​கி, சிவபெரு​மானின் இருப்​பிட​மாக நம்​பப்​படும் கைலாய மலை​யை​யும் மானசரோவர் ஏரியை​யும் பார்​வை​யிட்டு சுற்றி வரு​வார்​கள். இவர்​கள் வரும் 18-ம் தேதி லிபுலேக் கணவாய் வழி​யாக இந்​தியா திரும்பு​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in