கலப்பட கள் குடித்ததில் ஹைதராபாத்தில் 3 பேர் உயிரிழப்பு

கலப்பட கள் குடித்ததில் ஹைதராபாத்தில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் கலப்பட கள் குடித்​த​தில் 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் நேற்று அதி​காலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்​தி, மயக்​கம் ஏற்பட்டு கீழே விழுந்​தனர்.

இவர்​களில் சிலர் தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும், சிலர் செகந்​தி​ரா​பாத் காந்தி அரசு மருத்​து​வ​மனைக்​கும் கொண்டு செல்​லப்​பட்டு அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்றனர். 4 பேர் சிகிச்​சைக்கு பின்​னர் வீடு​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்​ததும், தெலங்​கானா மாநில கலால் துறை அமைச்​சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்​றும் உயர் அதி​காரி​கள் மருத்​து​வ​மனை​களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்​களின் உடல் நலம் குறித்து விசா​ரித்​தனர்.

உரிய சிகிச்சை அளிக்​கும்​படி மருத்​து​வர்​களிடம் அவர்​கள் கேட்​டுக்​கொண்​டனர். கலப்பட கள் விவ​காரத்​தில் 2 பேரை போலீ​ஸார் கைது செய்து விசாரணை நடத்தி வரு​கின்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in