கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை

கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை
Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்​டயக் கணக்​காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்​தரங்க வீடியோக்களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​போவ​தாக மிரட்டி ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்​கள் கடந்த 18 மாதங்​களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலா​விடம் இருந்து பறித்​துள்​ளனர்.

இந்த நிலை​யில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்​கடி கொடுத்​ததையடுத்து அந்த பட்​டயக் கணக்​காளர் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ராஜ் லீலா​வுக்கு பங்​குச் சந்​தை​யில் அதிக முதலீடு​கள் மற்​றும் அதிக சம்​பளம் பெறு​வதை தெரிந்து கொண்டு திட்​ட​மிட்டு அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர்.

மேலும், அவர் பட்​டயக் கணக்​காள​ராக வேலை செய்​யும் நிறு​வனத்​தின் பணத்தை தங்​களது சொந்த வங்​கிக் கணக்​குக்கு மாற்​றக் கோரி​யும் ராஜ்லீலா​வுக்கு நெருக்​கடி கொடுத்​துள்​ளனர். வேறு வழி​யில்​லாமல் ராஜ் லீலா இந்த முடிவை எடுத்​த​தாக கூறப்படுகிறது.

தற்​கொலை செய்​வதற்கு முன்​பாக அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது: நான், ராஜ் மோர். எனது சாவுக்கு ராகுல் பர்​வானி​தான் காரணம். அவர் என்னை மிரட்டி பல கோடி ரூபாய் பணத்தை பறித்​தார். கடந்த சில மாதங்​களாக மேலும் பணம் கேட்டு நெருக்​கடி கொடுத்​தார்.

எனது சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் கணக்​கி​லிருந்து பணத்தை திருடி​னார். எனவே என் மரணத்​துக்கு ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகியோர்​தான் காரணம். இவ்​வாறு ராஜ் மோர் அந்த கடிதத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ராஜ் மோர் தாயார் கூறுகை​யில், “எனது மகனின் அந்​தரங்க படத்தை வெளி​யிடு​வேன் என ராகுலும், சபா​வும் மிரட்டியுள்​ளனர். அவன் சேர்த்து வைத்த பணம் மற்​றும் நிறு​வனத்​தின் கணக்​கு​களில் இருந்து அவர்​கள் இரு​வரும் தங்​களது தனிப்​பட்ட கணக்​கு​களுக்கு பணத்தை மாற்​றிக் கொண்​டுள்​ளனர்.

இதனால் எனது மகன் பல மாதங்​களாக மன அழுத்​தத்​தில் இருந்​து​வந்​தான். தற்​போது இந்த விபரீத முடிவை தேடிக்​கொண்​டான். குற்​ற​வாளி​கள் நீதி​யின் முன் நிறுத்​தப்பட வேண்​டும்’’ என்​றார். இதையடுத்து அந்த இரு​வர் மீதும் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரிக்கின்றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in