ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏவின் செல்போன், பைக், டிராக்டர் திருட்டு

தீன் தயாள் பைரவா
தீன் தயாள் பைரவா
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட்டின் 25-வது ஆண்டு நினைவு தின பிரார்த்தனை கூட்டம் டவுசா பகுதியில் கடந்த ஜூன் 11-ல் நடந்தது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏ தீன் தயாள் பைரவாவின் செல்போன் திருடு போனது.

இதுகுறித்து பைரவா கூறும்போது, ‘‘கடந்த மாதம் என் செல்போனை திருடி விட்டனர். அதன்பின் பைக் காணாமல் போனது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து டிராக்டர் டிராலியை திருடிவிட்டனர்.

இது சாதாரண விஷயமல்ல. திட்டமிட்டு என்னை குறி வைத்து இந்த திருட்டுகள் நடக்கின்றன. இந்த சம்பவங்கள் எல்லாம் போலீஸார் மீதான நம்பிக்கையை கேள்விக் குறியாக்குகின்றன. எம்எல்ஏ.வுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களை அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in