

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லறை நாணயங்கள் மலை போல் குவிந்துள்ளன. உரிய சமயத்தில் இவைகளை வங்கிகளில் செலுத்தாத காரணத்தால் ரூ. 50 கோடி மதிப்புள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் நாணயங்கள் தேங்கி கிடக்கின்றன.
திருப்பதி ஏழுமலையானுக்கு நாள்தோறும் சுமார் இரண்டரை டன் எடை கொண்ட அளவிற்கு சில்லறை நாணயங்களை பக்தர் கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவைகளை தினமும் 15 வங்கி ஊழியர்கள் மற்றும் 50 தேவஸ்தான ஊழியர்கள் கணக்கிடுகின்றனர். இதில் பங் கேற்கும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ 50 மட்டுமே படி வழங்குவதால், பலர் இந்த பணி செய்ய முன்வருவதில்லை என கூறப்படுகிறது.
இந்த சில்லறை நாணயங்கள் உரிய காலத்தில் வங்கிகளில் செலுத்தப்படாத காரணத்தால், மலைபோன்று குவிந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றாததால் 50 டன் வரை தேக்கமடைந்துள்ளன. மேலும் உள்ளூர் நாணயங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக வங்கியில் மாற்றாததால் 100 டன்கள் வரை குவிந்துள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 கோடியாகும்.
சில்லறை நாணயங்களை வங்கிகளில் மாற்றம் செய்த பின்னர் 45 நாட்களுக்குள் அவை கணக்கில் கொண்டுவரப்பட்டு அதற்கு வட்டி வழங்கப்படும். தற்போது ரூ. 50 கோடி மதிப்புள்ள நாணயங்கள் குடோன்களில் தேங்கி கிடப்பதால், வட்டி ஏதும் வராமல் தேவஸ்தானத்திற்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
தேங்கி கிடக்கும் நாணயங்களில் தற்போது செல்லாத 25, 50 காசு நாணயங்கள் மட்டும் 10 டன்னுக் கும் மேல் உள்ளன. இவைகளை என்ன செய்வது என தேவஸ்தானத் தினர் ஆலோசித்து வருகின்றனர்.
இது குறித்து பரகாமணி துணை நிர்வாக அதிகாரி ராமாராவிடம் கேட்டதற்கு, ‘நாணயங்கள் தேக்கம் உண்மைதான். வெளி நாட்டு நாணயங்களை வங்கிகளில் மாற்றுவதற்காக, ரிசர்வ் வங்கி யிடம் அனுமதி கோரி உள்ளோம். இதேபோன்று உள்ளூர் நாணயங் களை கரன்ஸி டிரஸ்டிற்கு அனுப்ப வும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.