Published : 05 Jul 2025 06:07 AM
Last Updated : 05 Jul 2025 06:07 AM

ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடமாட்டம் கண்டறிப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். 3 தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இவர்களை தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், காஷ்மீரின் கிஸ்த்வரில் உள்ள கன்சல் மாண்டு என்ற அடர்ந்த வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக 3 நாட்களுக்கு முன் உளவுத் தகவல் கிடைத்தது.

அங்கு பாது​காப்பு படை​யினர் கடந்த புதன்கிழமை தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​ட​போது, மாலை 7.45 மணி​யள​வில் தீவிர​வா​தி​கள் துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். இதனால் இருதரப்பு இடையே துப்​பாக்கிச் சண்டை நடை​பெற்​றது. 2 அல்​லது 3 தீவிர​வா​தி​கள் வனப்​பகு​திக்​குள் பதுங்​கி​யிருக்​கலாம் என பாது​காப்பு படை​யினர் கருதுகின்​றனர்.

2 நாட்​களாக தீவிர​வா​தி​கள் சிக்​காத​தால், இவர்​களை கண்​டறிய ஹெலி​காப்​டர், ட்ரோன்​கள், மோப்ப நாய்​கள் தேடு​தல் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன. தேடு​தல் பணி​யில் பாது​காப்பு படை​யினர் அதி​கள​வில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x