Published : 04 Jul 2025 06:51 AM
Last Updated : 04 Jul 2025 06:51 AM

ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

ராஞ்சி: ஜார்க்​கண்​டில் ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என மத்​திய அமைச்சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார்.

ஜார்க்​கண்ட் மாநிலம் ஷங்கா முதல் கஜூரி வரையி​லான 23 கி.மீ. நீளத்​துக்​கு, ரூ.1,130 கோடி செல​வில் புதி​தாக 4 வழி நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சாலையை மத்​திய சாலை போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார். இது​போல, சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்டை இணைக்​கும் என்​எச் 39-ல் 32 கி.மீ. நீளத்​துக்கு ரூ.1,330 கோடி செல​வில் 4 வழி சாலை அமைப்​ப​தற்​கும் அமைச்​சர் அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் நிதின் கட்​கரி பேசி​ய​தாவது: ஜார்க்​கண்ட் மாநிலத்​துக்​கும் பிஹார் உள்​ளிட்ட பிற மாநிலங்​களுக்​கும் இடையே சிறந்த இணைப்பை ஏற்​படுத்த மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது. அந்த வகை​யில், ஜார்க்​கண்டில் ஒட்​டுமொத்​த​மாக ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். இதில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்​பிலான தேசிய நெடுஞ்​சாலை பணி​கள் முடிவடைந்​துள்​ளன.

இப்​போது ரூ.70 ஆயிரம் கோடி திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. மேலும் ரூ.75 ஆயிரம் கோடி திட்​டங்​கள் அமல்​படுத்​தப்பட உள்​ளன. ஜார்க்​கண்​டில் கடந்த 2014-ம் ஆண்டு 2,600 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்​சாலைகளின் நீளம், இப்​போது 4,470 கி.மீ. ஆக அதி​கரித்​துள்​ளது. இவ்வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x