ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு
Updated on
1 min read

புதுடெல்லி: அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார்.

சர்வதேச விமான போக்குவரத்து இயக்க விதிமுறைகளின்படி விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள், விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கையை இந்தியா வெளியிட வேண்டும்.

வெடி விபத்து உட்பட அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் கூறியிருந்தார். விமான விபத்து குறித்த முழு அறிக்கை வெளிவர இன்னும் 2 மாதங்கள் ஆகும். அதற்கு முன்பாக முதல்கட்ட அறிக்கை வரும் 11-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in