

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்(76), தனது வீட்டில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு ஜஸ்வந்த் சிங்குக்கு, தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் சிறப்பு பார்வையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மூத்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
பாஜக-வில் இருந்த ஜஸ்வந்த் சிங், கடந்த 2014-ஆம் தேர்தலில் அந்த கட்சியிலிருந்து விலகி, ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் தொகுதியில் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.