நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது

விஷால் யாதவ்
விஷால் யாதவ்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் காவல் துறை தலைவர் (சிஐடி-பாதுகாப்பு) விஷ்ணு காந்த் குப்தா கூறியதாவது: டெல்லி கடற்படை தலைமையகத்தில் உள்ள கப்பல்துறை இயக்குநரகத்தில் எழுத்தராக (யுடிசி) விஷால் யாதவ் பணியாற்றி வருகிறார்.

ஹரியாணாவின் ரேவாரியைச் சேர்ந்த இவர், இந்திய பெண்போல தன்னை காட்டிக் கொண்டு பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு ராணுவ ரகசியங்களை கசிய விட்டுள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்கள் பற்றிய ரகசிய விவரங்களை பாகிஸ்தான் பெண்ணிடம் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பல முகமைகளின் தீவிர காண்காணிப்புக்குப் பிறகு யாதவ் ஜெய்ப்பூரில் வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானிடம் தெரிவித்ததற்காக ரூ. 2 லட்சம் வரை சன்மானமாக பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in