காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: மேலும் 3 பேர் சுற்றிவளைப்பு

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: மேலும் 3 பேர் சுற்றிவளைப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தொலைதூர பசந்த்கர், பிஹாலி வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இதில் 4 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். வனப் பகுதிக்குள் சிக்கிய எஞ்சிய 3 பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஜம்மு போலீஸ் ஐஜி பீம் சென் துதி கூறுகையில், “இந்த 4 தீவிரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களை கடந்த ஓராண்டாக தேடி வந்தோம். மோசமான வானிலைக்கு மத்தியில் அங்கு மோதல் நடைபெறுகிறது" என்றார்.

காஷ்மீரில் வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் பிஹாலி' எனப் பெயரிப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in