Last Updated : 29 Jul, 2018 08:47 AM

 

Published : 29 Jul 2018 08:47 AM
Last Updated : 29 Jul 2018 08:47 AM

தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறைக்கு தடை விதிக்க முடியாது: தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உறுதி

தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறைக்கு தடைவிதிக்கக் கோரும் பரிந்துரைக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மதம் தொடர்பான பழக்கத்துக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அந்த ஆணையம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மலங்கரா கிறிஸ்தவ தேவலாயத்தில், பாவ மன்னிப்புக் கேட்ட பெண்ணை மிரட்டி 4 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் பெண் தெரிவித்த பாவ மன்னிப்பை வெளியில் கூறிவிடுவதாக மிரட்டியே, அவர்கள் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோல், சமீபகாலமாக கேரளத்தில் பாதிரியார்கள் மீது அதிக அளவிலான பலாத்கார புகார்கள் வந்திருக்கின்றன.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தேசிய பெண்கள் ஆணையம், தமது விசாரணை அறிக்கையை மத்திய அரசுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது. அதில், தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறையை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பரிந்துரையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவர் சையது கயோருல் ஹசன் ரிஸ்வி கூறியதாவது:

தேவாலயங்களில் பாதிரியார் களிடம் பாவ மன்னிப்பு கேட்பது என்பது கிறிஸ்தவ மதத்தின் உள்ளார்ந்த பகுதி ஆகும். எனவே, அதனை தடை செய்ய முடியாது. மேலும், மதம் சார்ந்த பழக்கவழக்கங்களில் எவ்விதத் தலையீடும் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். இதேபோல், மத்திய இணையமைச்சர் அல்போன்ஸும், தேசிய பெண்கள் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x