

நாற்பதுக்கும் அதிகமான வாகனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக நடிகை ஹேமமாலினி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மத்துரா மாவட்ட தேர்தல் அதி காரி உத்தரவின் பேரில், மத்துரா தொகுதியின் பாஜக வேட்பா ளரான ஹேமமாலினி மீது கோவர்தன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருவாரத்துக்குள் பதில் அளிக்கும்படி அவருக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் உபியில் ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் தாகூர் சாஹர் சிங் மற்றும் மத்துராவின் எம்பியும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி வேட்பாளருமான ஜெயந்த் சவுத்ரி மீதும் இது போன்ற வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஜெயந்த், மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.