பள்ளியில் சேர விரும்பிய ஏழை சிறுமி: உதவிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பள்ளியில் சேர விரும்பிய ஏழை சிறுமி: உதவிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read

லக்னோ: பள்ளியில் சேர விரும்பிய ஏழைச் சிறுமிக்கு அவர் விரும்பிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவ்வப்போது ஜனதா தர்ஷன் என்ற பெயரில் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில், முதல்வர் யோகியை ஏழைச் சிறுமி வஷி என்பவர் சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டார்.

அப்போது அவரது கோரிக்கை என்ன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிவுடன் கேட்டார். அதற்கு தான் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் வஷி கேட்டுக்கொண்டார். இதையடுத்து சிறுமி எந்த வகுப்பில் சேர விரும்புகிறாரோ, அந்த வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து சிறுமி வஷி கூறும்போது, “நான் மொராதாபாத்திலிருந்து லக்னோ வந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தேன். எனக்கு பிஸ்கட்டும், சாக்லேட்டும் கொடுத்து முதல்வர் வாழ்த்தினார். என்னுடைய குறையைக் கேட்டு பள்ளியில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in