ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை மோடி அரசாங்கம் கண்டிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை மோடி அரசாங்கம் கண்டிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை மோடி அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஜெயராம் ரமேஷ் எக்ஸ் பதிவு: இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஈரான் மீது அமெரிக்க விமானப்படையை கட்டவிழ்த்து விட அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு, ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட கருத்தை கேலி செய்வதாகும்.

ஈரானுடன் உடனடியாக ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்திய அரசாங்கம் இதுவரை இருந்ததை விட அதிக தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அமெரிக்காவின் குண்டுவீச்சு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் ஆகியவை குறித்து மோடி அரசாங்கம் விமர்சிக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் அது கடுமையான மவுனத்தைக் கடைபிடித்து வருகிறது" என விமர்சித்துள்ளார்.

3 அணுசக்தி தளங்கள் அழிப்பு: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன.

‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படை​யின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்​கள் நேற்று அதி​காலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறி​வைத்து ஜிபி​யு-57 பங்​கர் ரக வெடிகுண்​டு​களை வீசின. ஒவ்​வொரு விமான​மும் தலா 2 குண்​டு​கள் என மொத்​தம் 14 குண்​டு​களை வீசின. இவை 90 மீட்​டர் ஆழத்​துக்கு பூமியை துளைத்துச் சென்​று, வெடித்துச் சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்​றி​லு​மாக சேதமடைந்​தது.

ஈரானின் நடான்​ஸ், இஸ்​ப​கான் நகரங்​களில் உள்ள அணுசக்தி தளங்​கள் மீதும் பி-2 போர் விமானங்​கள், ஜிபி​யு-57 பங்​கர் வெடிகுண்​டு​களை வீசின. அதே​நேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடி​யில் முகாமிட்​டிருந்த அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவு​கணை​கள் சீறி பாய்ந்​தன. இந்த ஏவு​கணை​களும் நடான்​ஸ், இஸ்​ப​கான் அணுசக்தி தளங்​களை அடுத்​தடுத்து தாக்​கின. அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​களின்​ தாக்​குதல்​களால்​ ஈரானின்​ 3 அணுசக்​தி தளங்​களும்​ முற்​றி​லு​மாக அழிக்கப்பட்டுள்ளன.

சோனியா காந்தி கண்டனம்: முன்னதாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக `தி இந்து’ நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், "காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மிக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது மதிப்புகளையும் இழப்பதைப் போன்றதாகும்.

இத்தகைய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் 'இரு-நாடு' தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கைவிட்டுவிட்டது.

இந்த விவகாரத்தில் இனிமேலும் தாமதிக்காமல் இந்தியா தெளிவாக தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணித்து, பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in