ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு

ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு

Published on

புதுடெல்லி: எதிரிநாட்டு நீர் மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது.

எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கடல் கண்ணி வெடிகளை போடுவதற்கும், குறைந்த ஆழமுள்ள கடலோர பகுதிகளிலும் செல்லும் வகையிலான போர்க் கப்பல் ஒன்றை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) தயாரித்து கடற்படையிடும் கடந்த மே மாதம் 8-ம் தேதி ஒப்படைத்தது.

இந்த போர்க்கப்பலுக்கு மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் அர்னாலா என்ற வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின் பெயர் வைக்கப்பட்டது. 77 மீட்டர் நீளமுள்ள இந்த போர்க்கப்பல், இந்திய கடற்படையில் டீசல் இன்ஜின் - வாட்டர் ஜெட்-ல் இயங்கும் மிகப் பெரிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்கடியில் கண்காணிக்கவும், தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடவும், எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்த போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் கண்ணி வெடிகளையும் வைக்க முடியும். இந்தக் போர்க்கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in