கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பானாவர்கள் புற்றுநோய், சிறுநீரகம், இதய நோய் உள்ளிட இணை நோயால் பாதிக்கப்பட்டர்கள் ஆவர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 7 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 7 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்து 6,836 ஆக இருந்தது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,920, குஜராத்தில் 1,433, டெல்லியில் 649, மகாராஷ்டிராவில் 540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14,772 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லியில் உள்ள மேக்ஸ் சாகெத் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரொம்மல் டிக்கூ கூறும்போது, “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. இதனால் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in