காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விழைவு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 7-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், சோனியா காந்தி இதேபோன்ற வயிற்றுப் பிரச்சினைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been admitted to Sir Ganga Ram Hospital in Delhi. She has been admitted to the gastro department due to stomach-related problem and is under observation: Sir Ganga Ram Hospital pic.twitter.com/LT40WAYD1L

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in