அகமதாபாத்: விபத்தில் சிக்கிய விமானத்தின் வீடியோ ரெக்கார்டர் மீட்பு

மீட்கப்பட்ட  டிவிஆர்.
மீட்கப்பட்ட டிவிஆர்.
Updated on
1 min read

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (டிவிஆர்) சாத னத்தை குஜராத் தீவிர வாத தடுப்புப் பிரிவினர் நேற்று மீட்டனர்.

அனைத்து விமானங்களிலும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்று இருக்கும் இந்த சாதனத்தில், விமானத்தின் செயல்பாடு, பயணிகள் இருக்கும் பகுதி, விமானத்தின் வெளிப்புற பகுதி ஆகியவற்றின் வீடியோ காட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவாகும்.

விமான விபத்து நடந்த இடத்தில், இடிபாடுகளுக்கு இடையே டிவிஆர் சாதனத்தை தேடும் முயற்சியில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் நேற்று ஈடுபட்டனர். இறுதியில் விமானத்தின் டிவிஆர் மீட்கப்பட்டது. இது தடய அறிவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதில் உள்ள பதிவுகளை ஆராய்ந்தால் விமான விபத்துக்கான காரணங்கள் தெரியவரும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in