Published : 13 Jun 2025 09:26 AM
Last Updated : 13 Jun 2025 09:26 AM

விஜய் ரூபானியின் கடைசி புகைப்படமும், மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த துயரமும்

இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் எதிர்கால கனவுகளை தீக்கிரையாக்கியது துரதிருஷ்டவசமான விமான விபத்து.

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை சக பயணி ஒருவர் எடுத்ததாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.

ரூபானி லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மகளைச் சந்தித்துவிட்டு மனைவி அஞ்சலியுடன் மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர்கள் சாப்பிடும்போது சோகம்: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக திகலூட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. இதில் அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் விடுதி சுவர் சுக்குநூறாக உடைந்து அறை முழுவதும் சிதறிக் கிடப்பது தெரிகிறது.

மேலும் இங்குள்ள உணவு மேஜைகளில் சாப்பிடாமல் விடப்பட்ட உணவுத் தட்டுகளை காண முடிகிறது. இது, மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் விடுதிக் கட்டிடம் மீது விமானம் மோதியதை காட்டுகிறது.

கல்லூரி விடுதி... - குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விடுதியின் 4 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியதில், அந்த கட்டிடம் உடைந்து நொறுங்கியது. இதில், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விடுதியின் 4 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியதில், அந்த கட்டிடம் உடைந்து நொறுங்கியது. இதில், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x