தீ​விர​வாத நிதி உதவி வழக்கில் பிரி​வினை​வாத தலை​வருக்கு ஜாமீன் மறுப்பு

தீ​விர​வாத நிதி உதவி வழக்கில் பிரி​வினை​வாத தலை​வருக்கு ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போரை நடத்துவதற்கு சதி செய்ததாகவும், நிதி திரட்டியதாகவும் கூறி ஷபீர் ஷாவுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் ஷாவுக்கு எதிராக 2022 மார்ச்சில் குற்றச்சாட்டை பதிவு செய்தது.

இதையடுத்து ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் ஷபீர் ஷா மனுத்தாக்கல் செய்தார். இதனை 2023 ஜூலை 7-ம் தேதியன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வாதங்களின் இறுதியில் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷபீர் ஷாவின் மேல்முறையீட்டை நிரகாரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in