Last Updated : 12 Jun, 2025 10:06 PM

 

Published : 12 Jun 2025 10:06 PM
Last Updated : 12 Jun 2025 10:06 PM

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணியின் டெல்லி டு அகமதாபாத் பயண அனுபவம்!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய இந்த விமானம் டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்தது. அதில் பயணித்த பயணி ஒருவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“விபத்தில் சிக்கிய அதே விமானத்தில் தான் நான் அகமதாபாத் வந்தேன். நான் டெல்லியில் இருந்தேன் வந்தேன். நான் அமர்ந்திருந்த இடத்தில் வழக்கத்துக்கு மாறாக சில விஷயங்களை கவனித்தேன். இது தொடர்பாக ஏர் இந்தியாவுக்கு வீடியோ ட்வீட் செய்தேன்.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தர விரும்புகிறேன். என்னை தொடர்பு கொள்ளவும்” என எக்ஸ் தளத்தில் ஆகாஷ் என்பவர் தெரிவித்தார். விபத்தில் சிக்கிய விமானத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் வேலை செய்யவில்லை என்பதை தனது பதிவு மூலம் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நடந்தது என்ன? - விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 600+ அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது. விமானம் விழுந்த இடம் பி.ஜி மருத்துவக் கல்லூரி வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அங்கிருந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூப்வானி உட்பட சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதை குஜராத் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்குவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x