அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கதி என்ன?

அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கதி என்ன?
Updated on
1 min read

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் சென்ற அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் பட்டியல் ஆவணத்தின்படி, "விஜய் ராம்னிக்லால் ரூபானி" என்பவர் பட்டியலில் 12-வது பயணி ஆவார். அவர் வணிக வகுப்பு பிரிவின் கீழ் வரும் இசட் பிரிவில் பதிவு செய்துள்ளார்.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையம் அருகே புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி என சொல்லப்படுகிறது. ரூபானி ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத் முதல்வராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > அகமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து - மீட்புப் பணிகள் தீவிரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in