

புதிய ஆந்திர மாநிலத்துக்கு இரண்டு தலைநகரங்கள் அமைய வாய்ப்பு இருப்பதாக திங்கள்கிழமை கடப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிவராம கிருஷ்ணன் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் புதிய தலை நகரை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சிவராம கிருஷ்ணன் கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. இக் கமிட்டி, திங்கள்கிழமை ராயலசீமா பகுதியில் உள்ள கடப்பாவில் ஆய்வு செய்தது. அப்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தது.
இக்குழுவினரை சந்தித்த ஜம்மலமொடுகு சட்டமன்ற உறுப்பினர் ஆதிநாராயண ரெட்டி, கடப்பா மாவட்டம் மிகவும் பின்தங்கி உள்ளதால், இம்மாவட்டத்தில் புதிய தலைநகரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
இதனிடையே, பின்தங்கிய பகுதியான ராயலசீமாவில்தான் புதிய தலைநகரம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர், சிவராம கிருஷ்ணன் குழுவினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீ ஸார் கைது செய்தனர்.
பின்னர் இக்குழுவினர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் பரிசீலித்து வருகிறோம். ஒவ் வொரு மாவட்டத்திலும் நிறை, குறைகள் உள்ளன. இவைகளை யும் ஆய்வு செய்கிறோம். குறிப்பாக ராயலசீமா பகுதியில் பல நீர்தேக்க திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இவைகளின் நிலை குறித்தும் அறிக்கையில் தெரி விப்போம். தலைநகர் விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. ஆந்திராவுக்கு, தலைநகர் மற்றும் துணை தலை நகர் என இரண்டு தலை நகர்களைஅமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது என சிவராமன் கிருஷ்ணன் கமிட்டி யினர் தெரிவித்தனர்.