பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்: உமர் அப்துல்லா

பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்: உமர் அப்துல்லா
Updated on
1 min read

ஹஸ்ரத்பால்: உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த பக்ரீத் பண்டிகை அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் ஹஸ்ரத்பால் தர்காவில் தொழுகை நடத்தினர்.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “இந்த ஈத் பண்டிகை இந்திய மற்றும் உலக முஸ்லிம்களுக்கு சிறந்த நாட்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். இது அமைதியைக் கொண்டுவரும் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். நாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் அதே வேளையில், துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் ஒருமுறை, ஸ்ரீநகரின் சின்னமான ஜமா மசூதியில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த முடிவுகளின் அடிப்படை என்ன என எனக்குத் தெரியவில்லை, ஆனால் நம் மக்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வந்த அதே மக்கள் இவர்கள்தான். வரலாற்று சிறப்புமிக்க ஜமா மசூதியில் தொழுகையை அனுமதிப்பது பற்றி மத்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும்” என்றார்

முன்னதாக, இன்று பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மக்களை வாழ்த்தி, “ஈத் அல்-அதாவுக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியை வலுப்படுத்தட்டும். நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை பெற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in