பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

“பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” - பிரதமர் மோடி

Published on

புதுடெல்லி: ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில். “பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் மக்கள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். முழு விவரம்: > ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு - பெங்களூருவில் நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in