Published : 04 Jun 2025 07:14 AM
Last Updated : 04 Jun 2025 07:14 AM

ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது எப்படி?

புதுடெல்லி: ட்ரோன்​கள் மூலம் ரயில் பெட்டி களை சுத்தம் செய்வது குறித்து ரயில்வே அமைச்​சகம் கூறி​யுள்​ள​தாவது: ட்ரோன்​கள் மூலம் ரயில் பெட்​டிகளை சுத்​தம் செய்​யும் முயற்சி முதல் முறை​யாக சோதனை அடிப்​படை​யில் கடந்த ஏப்​ரல் மாதம் அசாமின் காமக்யா ரயில் நிலை​யத்​தில் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது.

அங்கு எளி​தில் செல்ல முடி​யாத ரயில் மற்​றும் நடைமேடைகளின் பகு​தி​களை சுத்​தம் செய்ய ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. மிக​வும் வலு​வான செயல்​திறன் மற்​றும் துல்​லி​யத்​தன்​மை​யுடன் அதன் பணி​கள் அமைந்​திருந்​தன. யாரும் எளி​தில் நுழைந்து சுத்​தம் செய்ய முடி​யாத இடங்​களை ட்ரோன்​கள் எளி​தாக அணுகி தூய்​மைப்​படுத்தி விடு​கின்​றன.

ரயில்​களை சுத்​தம் செய்​யும் ட்ரோன்​களில் உயர் அழுத்த நீர் நாசில்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு ரயில்வே அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. கடந்த மாதம், பாஜக தலை​வர் திலீப் கோஷ், காமக்யா ரயில் நிலை​யத்​தில் ரயில்​களை சுத்​தம் செய்​யும் ட்ரோன்​களின் வீடியோவை வெளி​யிட்​டிருந்​த​ரா். அதில், “ஒரு நாட்​டின் முன்​னேறத்​துக்கு நவீன, மேம்​பட்ட இயந்​திரங்​கள் அவசி​யம்’’ என்று அவர் குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்​திய ரயில்​வே, கடந்த சில ஆண்​டு​களாக பல வழிகளில் ட்ரோன்​களைப் பயன்​படுத்தி வரு​கிறது. ரயில்வே உள்​கட்​டமைப்​பின் பாது​காப்பு மற்​றும் பராமரிப்பு தொடர்​பான நிகழ்​நேர உள்​ளீடு​களைப் பெறு​வதற்​காக 2018-ல் ட்ரோன்​களை அறி​முகப்​படுத்​தி​யது. 2020-ம் ஆண்​டில், ரயில்வே அமைச்​சகம் 'நிஞ்ஜா ஆளில்லா வான்​வழி வாக​னங்​கள்' ஐ உரு​வாக்​கியது - இது நிகழ்​நேர கண்​காணிப்​பு, வீடியோ ஸ்ட்​ரீமிங் மற்​றும் தானி​யங்கி பாது​காப்​பு முறை கண்​காணிப்​பை மேம்​படுத்​தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x