‘ஒரே நாடு, ஒரே கணவர்’ திட்டமா? - பகவந்த் மானின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

‘ஒரே நாடு, ஒரே கணவர்’ திட்டமா? - பகவந்த் மானின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!
Updated on
1 min read

சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்யும் விதமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசிய கருத்தானது பெரும் அரசியல் சர்ச்சையை தூண்டியுள்ளது. அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்ததாக பாஜக தெரிவித்துள்ளது.

லூதியானாவில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்கு சேகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்குகளை கோருகிறது. அவர்கள் 'சிந்தூர்' என்பதை நகைச்சுவையாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகிறார்கள். இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் 'சிந்தூர்' பயன்படுத்துவீர்களா? இது 'ஒரே நாடு, ஒரே கணவர்' திட்டமா?" என்று கேள்வியெழுப்பினார்

அவர் பயன்படுத்திய “ஒரே நாடு, ஒரே கணவர்” என்ற சொற்றொடர் உடனடியாக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உருவாக்கியது. இது குறித்து பேசிய பஞ்சாப் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியாவால், "பகவந்த் மான் அனைத்து வரம்புகளையும் மீறுகிறார். ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்து, "மோடியின் பெயரில் சிந்தூர் அணிவீர்களா?" இது ஒரே நாடு, ஒரே கணவரா?" என்று அவர் அவர் வெட்கமின்றி கேட்கிறார்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் இந்துக்களின் மதத்தைச் சரிபார்த்த பிறகு அவர்களைக் கொன்றதற்கான பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர். பெண்களை அடையாளம் காண சிந்தூர் பயன்படுத்தப்பட்டது. பகவந்த் மான் "பூஜ்ய உணர்திறன்" கொண்டவர், அவர் இந்திய ராணுவத்தை கேலி செய்கிறார்” என்று கூறினார்

இது குறித்து பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “பகவந்த் மான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பகவந்த் மானின் கருத்துக்கள் இந்தியாவுக்கு எதிரானது, வெட்கக்கேடானது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in