ஹர்ஷ் குப்தா,  சுரீந்தர் சிங்
ஹர்ஷ் குப்தா, சுரீந்தர் சிங்

ஆபரேஷன் சிந்தூர் ‘லோகோ' வடிவமைத்த ராணுவ அதிகாரிகள்

Published on

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்ததது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்கள் துல்லிய தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டன.

இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கான லோகோவை இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.

இதில் இந்து பெண்கள் தங்கள் நெற்றியில் அணியும் குங்குமம் சிதறிக்கிடப்பது போல் வடிவமைக்கட்டு இருந்தது. மேலும் சிந்தூர் வார்த்தையில் ஒரு எழுத்து (O) குங்கும கிண்ணம் போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த லோகோ மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. பஹல்காமில் கணவரை இழந்த பெண்களுக்காக இந்தியா ராணுவத்தின் பதிலடிதான் இந்த நடவடிக்கை என்று கூறுவது போல் இருந்தது.

இந்நிலையில் இந்த லோகோவை லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா, ஹவில்தார் சுரீந்தர் சிங் ஆகியோர் வடிவமைத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in