‘வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ - தர்மேந்திர பிரதான்

‘வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ - தர்மேந்திர பிரதான்
Updated on
1 min read

புதுடெல்லி: 2047-ம் ஆண்டுக்குள், இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். இந்தியா வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "“இன்று, இந்தியாவில் மாணவர்களின் எண்ணிக்கை 300 மில்லியன். அதில் 40 மில்லியன் பேர் மட்டுமே உயர்கல்வியில் உள்ளனர். எங்களிடம் 1200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 50,000 கல்லூரிகள் உள்ளன. ஆனால் GER (மொத்த சேர்க்கை விகிதம்) சுமார் 26-27% ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் அதை 50% ஆக உயர்த்த வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரை ஆகும்.

இன்று, இந்தியா உலகளவில் 4வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. பிரதமர் மோடி நமக்கு ஒர் இலக்கை நிர்ணயித்துள்ளார். 2047-ம் ஆண்டுக்குள், இந்தியா ஒரு வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். வளர்ந்த நாடாக வேண்டும் என்ற லட்சியத்தை நீங்கள் அடைய விரும்பினால், நாம் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கையின் முதன்மை பரிந்துரைகளில் ஒன்று. நாம் எல்லைகளைக் கடந்து பார்க்க வேண்டும். நாம் உலகளாவியவர்களாக மாற வேண்டும் என்பதுதான்.” என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in