ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் நக்சலைட் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தேகார் பகுதியில் பாதுகாப்பு படையினர் - நக்சலைட்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் நக்சலைட்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த நபர் உடனே கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர், 'ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத்' என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பப்பு லொகாரா என அடையாளம் காணப்பட்டார். இவரது தலைக்கு போலீஸார் ரூ.10 லட்சம் வெகுதி அறிவித்திருந்தனர்.

கொல்லப்பட்ட மற்றொருவர் பப்பு லொகாராவின் உதவியாளர் பிரபாத் கஞ்சு என அடையாளம் காணப்பட்டார். இவரைப் பற்றிய தகவலுக்கு போலீஸார் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர்.

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 50 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு 27 மாவோயிஸ்ட்கள் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டனர். இவர்களில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் பசவராஜும் ஒருவர் ஆவார். இந்நிலையில் பசவராஜ் கொல்லப்பட்ட 3 நாட்களில் நக்சலைட் அமைப்பின் மற்றொரு தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

வரும் 2026, மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சலிசத்தை முற்றிலும் ஒழிக்க பிரதமர் மோடி அரசு உறுதியேற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in