பாகிஸ்தான் தூதரக 2-வது அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தான் தூதரக 2-வது அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் நடைபெற்றது. இந்நிலையில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை கடந்த 13-ல் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் 24 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

அவர் தனது அந்தஸ்துக்கு ஏற்ற பணியில் ஈடுபடாமல் பிற பணிகளில் ஈடுபட்டதால், அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாக். தூதரக அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகையை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in